நபி வழியில் ஸுஜூத் அதிகரிக்க - அஹ்லுஸ் சுன்னா
சஜ்தாவின் முக்கியத்துவம்
ரபீஅதிப்னு கஃபுல் அஸ்லமீ(ரஹ்) அவர்கள், ‘சுவனத்தில் நபி(ச) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் அதிகமாக சுஜூது செய்வதன் மூலம் உனது தேவையை அடைந்து கொள்ள எனக்கு உதவி செய்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 488-225, அபூ தாவூத்: 1320, நஸாஈ: 1138)
ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில்துஆவை அதிகப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482
முஸ்லிம் 832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book :4
முஸ்லிம் 842. மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள் என்றார்கள். பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
Book :4
ராத்திபான சுன்னத்துகள் (அ) சுனன் ராத்திபன்
1319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. Book :6
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''லுஹருக்கு முன் இரண்டு, பின் இரண்டு ரக்அத்கள். மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 400. முஸ்லிம் நூலில் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களும் லுஹருக்குப் பின்பு ரக்அத்களும் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது. - முஸ்லிம் 1323
லுஹ்ருக்கு முன் இரண்டு, பின் இரண்டு என நான்கு ரக்அத்கள்!
அஸருக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
மக்ரிபுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள்!
பஜ்ருக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள்
சுன்னத் தொழுகைகள் இரண்டு இரண்டாக தொழப்பட வேண்டும் :
நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமீன்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) (நூல் - திர்மிதீ 394)
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை
624. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.'
என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
மஃக்ரிப்'க்கு முன் தொழுகை
7368. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'மஃக்ரிப்' தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்' என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, 'இது விரும்புவோருக்குத் தான்' என்றார்கள்.104
Volume :7 Book :96
625. அனஸ்(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள். Volume :1 Book :10
பயணத்தில் சுன்னத் தொழுகை இல்லை
‘நான் இப்னு உமர்(ர) அவர்களுடன் மக்காவின் பாதையில் இருந்தேன். அவர் ழுஹரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துக்களாகத் தொழுவித்தார்கள். பின்னர் வெளியேறினார்கள். நாமும் வெளியேறினோம். பின்னர் தொழுத இடத்தைப் பார்த்தார்கள். (பயணிகளில் சில) எழுந்து தொழுவதைப் பார்த்தார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர் கேட்க (சுன்னத்) தொழுகின்றார்கள் என்று கூறினேன். சுன்னத்துத் தொழுவதாக இருந்தால் நான் தொழுகையைச் (சுருக்காமல்) பூரணப்படுத்தியிருப்பேன். என் சகோதரன் மகனே! நான் நபி(ச) அவர்களுடன் பயணத்தில் இருந்துள்ளேன். அவர் மரணிக்கும் வரை இரண்டு ரக்அத்துக்களுக்கு மேல் தொழுததில்லை. இவ்வாறே அபூபக்கர், உமர், உஸ்மான், ஆகியோருடனும் பயணத்தில் இருந்துள்ளேன். அவர்கள் இரண்டு ரக்அத்துக்களுக்கு மேல் தொழுததில்லை. அல்லாஹ் தன் திருமறையில், ‘உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது.’ (33:21)’ என்று கூறுகின்றான் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹப்ஸ் இப்னு ஹாஸிம் (ர) நூல்: முஸ்லிம் 689-8, இப்னு மாஜா 1071
தஹிய்யதுல் மஸ்ஜித்:
“உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்கு வந்தால் அவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” (அறி: அபூகதாதா(வ), ஆதாராம்: அபூதாவூத்-467)
தொழக்கூடாத நேரங்கள் :
சூரியன் உதிக்கத் துவங்கியதி¬ருந்து முழுமையாக வெளிவரும் வரை, சூரியன் உச்சத்திற்கு வந்து மேற்கின் பக்கம் சாயும் வரை, சூரியன் மறைத் துவங்கியதி¬ருந்து முழுமையாக மறையும் வரை உள்ள நேரங்களில் தொழுவது கூடாது. மூன்று நேரங்களில் தொழவேண்டாம். அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதி¬ருந்து நன்கு உயரும் வரை
2. (ஒருவர் உச்சிப் பொழுதில் நிற்கும் போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதி¬ருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை
3. சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதி¬ருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர¬), நூல்கள் : முஸ்¬ம் (1511), திர்மிதீ
(951), நஸயீ (557), அபூதாவூத் (2777), இப்னுமாஜா (1508), அஹ்மத் (16737)
473. ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
புஹாரி: 581 உமர் (ரலி)
474. ''ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 586 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
475. ''சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 582 இப்னு உமர் (ரலி)
476. சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3272 இப்னு உமர் (ரலி)
யாரேனும் ஒருவர் தொழுகையை(த்தொழ) மறந்து விட்டால் நினைவு வரும்போது அதைத் தொழட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா).
தொழாமல் உறங்கிவிடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ''உறங்கி விடுவதில் வரம்பு மீறல் இல்லை. விழித்திருப்பதிலேயே வரம்பு மீறல் உண்டு. உங்களில் ஒருவர் தொழ மறந்து விட்டால் அல்லது உறங்கி விட்டால் அதன் நினைவு வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூ கதாதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 162, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா).
இஸ்ராக் – அவாபின் - ளுஹா
உங்களுள் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தம்) ஒவ்வொரு (உடலுறுப்பின்) மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு (சுப்ஹானல்லாஹ்) துதிச் சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு(அல்ஹம்து லில்லாஹ்) புகழ்ச் சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு (லா இலாஹ இல்லல்லாஹ்) ஓரிறை உறுதிமொழியும் தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹு அக்பர்) சொல்லும் தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) இரண்டு ரக்அத்கள் (ளுஹா) தொழுவது போதுமானதாக அமையும். - அறிவிப்பவர் அபூதர் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1181, அபூதாவூத்).
417– நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுததாக உம்முஹானி (ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவித்ததில்லை. ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது என்னுடைய இல்லத்தில் குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி (ரலி) குறிப்பிட்டார்கள். புஹாரி: 1103 இப்னு அபீ லைலா (ரலி)
418-ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன். புஹாரி: 1178 அபூஹூரைரா (ரலி)
தராவீஹ் +தகஜ்ஜுத் + கியமுல்லைல்
‘இப்னு உமர்(வ) அறிவித்தார்கள். நபி(வ) அவர்கள் மேடை மீது இருக்கும் போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார்;. ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். சுபஹ் நெருங்கிவிட்டது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழவும். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி(ச) கூறினார்கள்.” (புஹாரி: 472, 990, 993, முஸ்லிம்: 749-145, இப்னுமாஜா: 1175, அபூ தாவூத்: 1326, திர்மிதி: 437, நஸாஈ: 1668)
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், ‘ரமழானின் இரவுத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட ரக்அத் எண்ணிக்கை உண்டு. அதை விட கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது என யார் நினைக்கின்றாரோ அவர் நிச்சயமாக தவறிழைத்துவிட்டார் என்று கூறுகின்றார்கள். (அல்பதாவா: 2ஃ119)
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569
முஸ்லிம் 1339. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும்வரை வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர் வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள். இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :6
‘நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(வ) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளை யிடுவார்கள். ” (புஹாரி: 991)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்கள்: நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.(முஸ்லிம் 1381)
நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37).
1388. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்" என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :6
சுபிட்சமும், உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1145
தஸ்பிஹ் தொழுகை :
ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் கிடையாது (காணொளியை பார்க்க)
இகாமத் சொல்லப்பட்டு விட்டால்: -
பர்லு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் சுன்னத்தான தொழுகையைத் தொழக் கூடாது. ஏனெனில் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
சஜிதாவில் துஆ
834. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ (இறைவா! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :4
840. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்று கூறுவார்கள்.
(பொருள்: (இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.)
Book :4
சஜ்தா திலாவத்.
1421. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்" என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும்)
அல் அஃராப்: 206
அர்ரஃத்: 15
அன்னஹ்ல்: 49
அல் இஸ்ராஃ:107
மர்யம்: 58
அல்ஹஜ்: 18,77
அல்புர்கான்: 60
அன்னம்ல்: 25
அஸ்ஸஜதா :15
சாத்: 24
புஸ்ஸிலத்: 37
அன்னஜ்ம்: 63
இன்ஷிகாக்: 21
அலக்: 19
Comments
Post a Comment