புயல் மற்றும் மழையின் பொழுது கேட்கவேண்டிய பிராத்தனைகள்..!



புயலின் போது துஆ :

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا 
وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி

பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496

மழை பொழியும் போது ஓதும் துஆ

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன் பொருள்:- இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! ஆதாரம்: புகாரி 1032

அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் இந்த துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்மஸ்கினா கய்ஸன் முகீஸன், மரீஅன் மரீعன் நாஃபிஅன் கைர ழார்ரின், ஆஜிலன் கைர ஆஜிலின். .

பொருள்:- யா அல்லாஹ்! உதவியையும், மகிழ்வையும் , அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியில்லாமல் பயனையும் , தாமதமில்லாமல் துரிதமாகவும் எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! நூல்:- அபூதாவூத்


اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

பொருள்:- இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி :1020

Comments