எதிரிகளுக்கு எதிரான துஆக்கள்









اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வ நஊது பிக்க மின் ஷுரூரிஹிம்

பொருள் : யா அல்லாஹ் அவர்களுக்கு எதிரில் உன்னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்ப தேடுகிறோம்.
ஆதாரம் : அபூதாவூத்
-------------------------------------------------------------

اللَّهُمَّ أَنْتَ عَضُدِي ، وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ

அல்லாஹும்ம அன்த்த அளுதி வ அன்த்த நஸீரி பிக அஜுலு வபிக அசூலு வ பிக உகாதிலு

பொருள் : யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம் நீயே எனெக்கு உதவி செய்பவன். உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போராடுகிறேன்.
ஆதாரம் : அபூதாவூத், திர்மீதி
---------------------------------------------------------------------

حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.

பொருள் : அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும் பொறுப்பேர்பவர்களில் அவன் சிறந்தவன் (அல்குரான் 3:173)
ஆதாரம் : புகாரி
-------------------------------------------------------------------------------

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اهْزِمَ الأَحْزَابَ ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி ஸரீஅல் ஹிஸாபி இஹ்ஸிமில் அஹ்ஸாப அல்லாஹும்மஹ் ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்

பொருள் : வேதத்தை இறக்கி வைத்தவன் துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிர்படைகளை தோற்கடிப்பாயக! இன்னும் அவர்களை உலுக்கி நிலை தடுமாறியவர்களாக ஆக்கி விடுவாயாக.
ஆதாரம் :முஸ்லிம்
----------------------------------------------------------------------------------------

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“எங்கள் ரப்பே! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250
-------------------------------------------------------------------------------------

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

“(எங்கள் ரப்பே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86
---------------------------------------------------------------------------------

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

“என் ரப்பே! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”. 28:21
-----------------------------------------------------------------------------------

رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

“என் ரப்பே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” . 29:30


Comments